தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பயமில்லாமல், பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகமெங்கும் உள்ள மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தம் 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.