Publish Date: Fri, 31 Jul 2020 (09:40 IST)
Updated Date: Fri, 31 Jul 2020 (09:44 IST)
தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கான ரிசல்ட் இன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன.
இன்று காலை 09.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டில் 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 94.38% சதவீதம் பேரும், மாணவிகள் 97.49% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.