Publish Date: Mon, 31 Jan 2022 (14:27 IST)
Updated Date: Mon, 31 Jan 2022 (14:29 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணையை சற்றுமுன் வெளியாகி உள்ளது
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9 முதல் 16 வரை திருப்புதல் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது
அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது
பத்தாம் வகுப்புக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என்றும் 12ஆம் வகுப்புக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது
Mahendran
Publish Date: Mon, 31 Jan 2022 (14:27 IST)
Updated Date: Mon, 31 Jan 2022 (14:29 IST)