Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணவகங்களில் 1000 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Advertiesment
namakkal
, செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (19:54 IST)
நாமக்கல் பகுதியில் உள்ள பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் 14 வயது சிறுமி சவர்மா சாப்பிட்ட நிலையில் அவர் திடீரென வாந்தி மயக்கம் எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் சிகிச்சை  பலன் இன்றி காலமானார்.

இதனை அடுத்து சவர்மா கடையில் அதிரடியாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் உணவக உரிமையாளர் நவீன் குமார் உள்பட 3 பேருக்கு கைது செய்யப்பட்டனர்.

ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு எதிரொலியாக சிவகங்கையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், சிவகங்கையில் உள்ள பல்வேறு உணவகங்களில் சுமார் 1000 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

50கிலோ கெட்டுப்போன உணவு, ஷவர்மா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்ட  நிலையில் குறிப்பிட்ட கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, மாம்பலம் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளையாட்டு சங்கங்கள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் –மேக் நாத் ரெட்டி