Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

Advertiesment
டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

Senthil Velan

, வெள்ளி, 21 ஜூன் 2024 (20:49 IST)
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ. 1, 734 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்பிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 2023-24ல் டாஸ்மாக் வருமானம் ரூ.45,855.67 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட ரூ.1,734.54 கோடி கூடுதலாகும். 2022-23ல் டாஸ்மாக் மூலம் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் எரி சாராய கடத்தல், போலி மதுபானம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 101 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலகுகள் செயல்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
போலி மதுபான கடத்தலை தடுக்க மாநிலம் முழுவதும் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2023 – 24 ஆண்டில் எரிசாராய கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12,431 விஷச் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,422 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். 4.64 லட்ச லிட்டர் விஷச் சாராயம் அழிக்கப்பட்டுள்ளன.
 
மெத்தனால் தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகள், மெத்தனால் வைத்திருக்க உரிமம் பெற்ற ஆலைகள் ஆகியவற்றில் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சோதனையிட வலியுறுத்துப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 
மெத்தனால் உரிமம் வைத்திருக்கும் அலகுகளை கண்காணிக்கவும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!