Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளை அதிகம் பாதித்த கொரோனா - 3வது அலை தாக்கமா?

குழந்தைகளை அதிகம் பாதித்த கொரோனா - 3வது அலை தாக்கமா?
, சனி, 4 செப்டம்பர் 2021 (13:26 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பரவலில், குழந்தைகளின் பாதிப்பு 10% அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா 3 வது அலையால் பெரிய பாதிப்பு இருக்காது என முன்னரே தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளை மூன்றாவது அலை தாக்க கூடும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பரவலில், குழந்தைகளின் பாதிப்பு 10% அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் 6% என்றிருந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஆகஸ்டில் 10% என உயர்ந்திருப்பதாக தரவுகள் தெரிவித்துள்ளன. இதனால் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தஒப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் ஊரடங்கு அவசியம்: மத்திய அரசு பரிந்துரை