தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள் திறக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் நத்தம் வட்டத்தில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நத்தம் வட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதை அடுத்து இது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நத்தம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடுவது என முடிவு செய்யப்பட்டது
இதனை அடுத்து ஜூலை 11 முதல் 20 ஆம் தேதி வரை நத்தம் வட்டாரத்திலுள்ள 23 ஊராட்சிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்படும் என வியாபாரிகள் தரப்பில் ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் பால் மருந்து பொருட்கள் ஆகியவை மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் நத்தம் வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்