Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
, வியாழன், 9 ஜூலை 2020 (20:36 IST)
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,30,599 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மாநிலத்தில் இன்று மட்டும் 219 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 9,667 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்
 
மகாராஷ்டிராவை அடுத்து டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 107,051 ஆக உயர்ந்துள்ளது என்பதும், குஜராத்தில்  இன்று ஒரே நாளில் 861 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,280 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,088 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,911 ஆக உயர்ந்துள்ளது என்பதும், கர்நாடகா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,228 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,159 ஆக உயர்ந்துள்ளது என்பதும், கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஐடி நிறுவனங்கள் இயங்கலாமா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு