தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 10 மசோதாக்களை திடீரென கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று காலை சிறப்பு சட்டமன்றம் கூடி, கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் கவர்னரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.