தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:31 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,542 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,08,748 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,542  பேர்களில் 162 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 34,835 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,793 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 25,56,116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,62,487 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 416,90,759 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments