Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.டி.உஷாவின் தேசியச் சாதனையை சமன்செய்த வித்யா ராமராஜ்- அண்ணாமலை பாராட்டு

Advertiesment
vidhya ramaraj
, செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:39 IST)
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி வித்யா ராமராஜ் வெண்கலப் பதக்கம் வென்று  நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மா நில தலைவர் அண்ணாமலை தன் சமூக வலைதள பக்கத்தில்,
‘’ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி வித்யா ராமராஜ் அவர்களுக்கு,  தமிழக  சார்பாக மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரி வித்யா ராமராஜ் அவர்கள்,  பாரதத்தின் தங்க மங்கை, திருமதி பி.டி.உஷா அவர்களின் 39 ஆண்டு கால தேசியச் சாதனையை சமன்செய்து, இறுதிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றிருக்கிறார் என்பது மிகவும் சிறப்பு.

சகோதரி வித்யா ராமராஜ் அவர்கள், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்தைப் பெருமைப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சிறுவன்...