Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''நான் முதல்வன்'' திட்டம் மூலம் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

Advertiesment
''நான் முதல்வன்'' திட்டம் மூலம் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

Sinoj

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (21:18 IST)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்  கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது நான் முதல்வன் திட்டம். இட்திட்டத்தின் மூலம் 2022-2023 கல்வியாண்டில் மட்டும் சுமார் 1.19 லட்சம் கல்லூரி மாணவர்கள் பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்று பணியமர்த்தப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
''• தமிழ்நாட்டில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி வைத்தார்.
 
• ‘நான் முதல்வன்‘ இணையதளத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு பாடங்கள் பற்றிய மேம்பட்ட தகவல்கள் வழங்குவதையும், தொழில் சார்ந்த திறன்கள் பற்றிய தகவல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
 
• இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று, அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்து வருகிறது.
 
• தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், உற்பத்தி, வங்கி மற்றும் நிதி, பசுமை ஆற்றல், லாஜிஸ்டிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மற்றும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டப் பயிற்சிகள் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது 2023 அக்டோபர் மாத நிலவரப்படி, சுமார் 13 லட்சம் மாணவர்கள் உயர்தர திறன் பயிற்சிப் பெற்று பயனடைந்துள்ளனர்.
 
2022-2023 கல்வியாண்டில் மட்டும் சுமார் 1.19 லட்சம் கல்லூரி மாணவர்கள் பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்று பணியமர்த்தப் பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுள்ளது,
2022-2023 கல்வியாண்டில் மட்டும் சுமார் 1.19 லட்சம் கல்லூரி
மாணவர்கள் பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்று
பணியமர்த்தப் பட்டுள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லப் பிராணிகளுக்கு ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா