Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கு அரசியலில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை-ஒய்.ஜி.மகேந்திரன்

Advertiesment
vijayy

Sinoj

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:12 IST)
விஜய்யின் முதல் படத்தில் நடித்த ஒய்.ஜி மகேந்திரன்  அவரது அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், ஆகியோரைத் தொடந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். 
 
தன் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய் அறிவித்து, புதிய அறிக்கையும் வெளியிட்டு, தன் கட்சி  நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
 
இந்த நிலையில்,நடிகர் விஜய் அரசியல் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது அரசியல் வருகை பற்றி சினிமாத்துறையினரும், அரசியல் பிரபலங்களும் கருத்துகள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், விஜய்யின் முதல் படத்தில் நடித்த ஒய்.ஜி மகேந்திரன்  அவரது அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில், சினிமாவில் மார்க்கெட் போய் ஓய்ந்தபிறகு விஜய் அரசியலுக்கு வரவில்லை. நன்றாக சம்பாதிக்கும் போது வந்திருக்கிறார். அதனால் அரசியலில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லையென தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, விஷால் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது, அவர் நிச்சயம் அரசியலில் ஜெயிப்பார் என அவரது தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரமுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா....எந்த படத்தில் தெரியுமா?