Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னையா ஏமாற்ற பார்க்கிறாய் ? வீடியோ எடுத்து மிரட்டிய காதலனுக்குப் பாடம் புகட்டிய பெண் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (07:54 IST)
கோப்புப் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காதலியுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய காதலனுக்கு பாடம் புகட்டியுள்ளார் ஒரு பெண்.

தூத்துகுடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருன் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்த வினீத் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என மிரட்டியுள்ளார். மேலும் வற்புறுத்தினால் வீடியோவை வெளியே விட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

அவரின் மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண் தூத்துக்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலிஸார் கூறியுள்ளனர். ஆனால் ஒரு மாத காலத்துக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  மாவட்ட சூப்ரண்ட் அலுவலகத்தில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சூப்ரண்டு போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்க விரைவில் வினீத்தைக் கைது செய்து அவரிடம் இருந்து வீடியோவைக் கைப்பற்றுவோம் என உறுதி அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்