4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகள் விலகும். திடமான முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பேச்சில் சூடு குறையும். பக்குவமாகப் பேசி சாதிப்பீர்கள்.
பிள்ளைகளின் ஒத்துழைப்பு உண்டு. ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை பிறக்கும்.
வெளிவட்டாரம் உற்சாகம் தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கனியும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. . உறவினர், நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளி நாட்டிலிருப்பவர்கள், வேற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
புது வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். வி. ஐ. பி கள் உதவுவார்கள் . கட்டிட வேலைகளும் முன்னேற்றம் தரும். மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும். அக்கம்-அக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.
வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்களை அனுசரித்து போவீர்கள். இரும்பு, புரோக்கரேஜ், உணவு வகையால் முன்னேற்றம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.
உத்யோகத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சம்பளப் பிரச்சனைகள் தீரும். கடின உழைப்பால் முன்னேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்-2, 5, 11, 14, 20, 23, 29
அதிஷ்ட எண்கள் -2, 5
அதிஷ்ட நிறங்கள்- சில்வர்கிரே, வைலெட்
அதிஷ்ட கிழமைகள்- செவ்வாய், வியாழன்