Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3, 12, 21, 30

3, 12, 21, 30

Webdunia

, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (15:50 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதியை காட்டிலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.

குடும்பத்தில் வழக்கமான அமைதி உண்டு. பணவரவு தேவையான அளவு இருக்கும். மனைவியுடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. வயிற்று வலி, தொண்டை புகைச்சல் நீங்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். நண்பர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள்.

கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு கிட்டும். குலதெய்வப் பிராத்தனைகள் நிறைவேறும். மற்றவர்களை நம்பி அதிரடி முடிவுகள் எடுக்க வேண்டாம். புது வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும். உறவினர்களிடம் ஒருபடி விலகி நிற்பது நல்லது.

வியாபாரத்தில் அபிவிருத்தி அடையும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை. வேலையாட்களை அனுசரித்து போவீர்கள். எலக்ட்ரிகல், இரும்பு, உணவு வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் பணிகளில் அக்கறை காட்டுங்கள். தனி நபர் விமர்சனத்தை தவிக்கவும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். அலைச்சல், செலவு வந்து செல்லும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்-1, 6, 10, 15, 19, 24, 28

அதிஷ்ட எண்கள் -1, 6

அதிஷ்ட நிறங்கள்- ரோ°, வெளிர்பச்ச

அதிஷ்ட கிழமைகள்- செவ்வாய், புதன

Share this Story:

Follow Webdunia tamil