1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதி சுமாராக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கொடுக்கல்-வாங்கலில் மகிழ்ச்சி தங்கும்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மருத்துவச்செலவுகள் குறையும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன் கோபம் வந்து போகும். பேச்சில் நிதானம் தேவை.
உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வயிற்றுக் கோளாறு, தலைச்சுத்தல் வந்து போகும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குல தெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர்ந்து படிப்பார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். இரும்பு, புரோக்கரேஜ், உணவு வகைகளால் நல்ல லாபம் உண்டு. மறைமுகப் போட்டிகளை சாமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த வேலைகளை ஒவ்வொன்றாக முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் அனுசரித்து போவது நல்லது. தனி நபர் விமர்சனத்தை தவிர்க்கவும். உற்சாகம் பொங்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்-3, 9, 12, 18, 21, 27, 30
அதிஷ்ட எண்கள் -3, 9
அதிஷ்ட நிறங்கள்- பிஸ்தாபச்சை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்- திங்கள், புதன்