Publish Date: Fri, 30 Sep 2016 (18:01 IST)
Updated Date: Fri, 30 Sep 2016 (18:03 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள்.
மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் தொண்டை புகைச்சல், கழுத்து வலி, வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். விலை உயர்ந்த நகைகளை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.
கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியால் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 9, 6, 24, 21, 18
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெளிர் மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்