Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:59 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

கொடுக்கல்-வாங்கலில் திருப்தி ஏற்படும். பழைய வழக்குகளில் வெற்றியுண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும்.
 
வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.
 
பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். என்றாலும் தந்தைக்கு கை, கால், மூட்டு வலி வந்துப் போகும். மனைவியுடன் மனஸ்தாபம் வரும். மாதத்தின் பிற்பகுதியில் ஒருவித பதட்டம், படபடப்பு, கோபம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உங்களின் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். வெற்றிக்கனியை பறிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 8, 6, 14, 15, 17
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25