Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Advertiesment
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:53 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் மனப்போராட்டங்கள் ஓயும். சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள்.

வி.ஐ.பிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.
 
பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்த செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அவ்வப்போது ஒருவித அச்சம், தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும்.
 
உங்களுடன் பழகுபவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். என்றாலும் அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பங்கை போராடி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். தன்கையே தனக்குதவி என்பதை உணரும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 7, 16, 15, 24, 20
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24