6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
மனதிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்கள் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும்.
கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனை வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.