Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 1, 10, 19, 28

Advertiesment
நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 1, 10, 19, 28
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
எடுக்கும்  முடிவில் ஸ்திரமாக இருக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நீங்கி வேகம் எடுக்கும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். பழைய வாகனத்தை  விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில்  ஈடுபடுவீர்கள். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு வீண்  விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள்  வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். 
 
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (2-11-2020)!