Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (2-11-2020)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (2-11-2020)!
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
மேஷம்:
இன்று நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி  காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
 
ரிஷபம்:
இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்  நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
 
மிதுனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும்  முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
 
கடகம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9
 
சிம்மம்:
இன்று மாணவர்களுக்கு  கல்வியில்  வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும்.  நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
 
கன்னி:
இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3
 
துலாம்:
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
 
விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை  தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6
 
தனுசு:
இன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை.  திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5
 
மகரம்:
இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க  வேண்டிய சூழல் உருவாகும். பணவரத்து இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9
 
கும்பம்:
இன்று மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம்  தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3
 
மீனம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள்  குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (1-11-2020)!