5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
அடுத்தவர் மனதை சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். தம்பதிகளுக்கு இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். கலைத்துறையினர் லாபம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மனோ பலம் கூடும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.