Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

Advertiesment
மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (14:54 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எல்லோரிடமும் ரகசியத்தை காப்பாற்றும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மாற்றம்  உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். 

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். பணவரத்து   தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பெண்களுக்கு  தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை  அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்துறையினருக்கு பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் உள்ள தச வாயுக்கள் எவை? அவற்றின் பணிகள் என்ன...?