இப்போது தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் ரிலீஸ் ஆவது அதிகரித்துள்ளது.
200க்கும் மேற்பட்ட படங்கள் ஒரு வருடத்தில் எடுக்கப்படுவது, அதிகப்படியான நட்சத்திர நடிகர்கள், அதிகப்படியான திரையரங்குகள் இல்லாதது, குறுகிய காலத்தில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் , திருட்டு தனமாக ஆன்லைனில் படம் வெளியாவது உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு வாரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் வரும் மார்ச் 1ம்தேதி 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது
தடம், 90ml, திருமணம், தாதா 87, விளம்பரம், மனசை, பிரிவதில்லை, அடடே உள்ளிட்ட எட்டு படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இதனால் நட்சத்திர நடிகர்களின் படங்களை தவிர மற்றவர்களின் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினம் ஆகி வருகிறது. ஓவியாவின் 90 எம்எல், சேரனின் திருமணம், அருண் விஜயின் தடம் ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. மற்ற படங்களில் தாதா 87 படத்துக்கு ஓரளவுக்கு திரையரங்குகள் கிடைத்துள்ளது. மற்ற படங்களின் நிலை குறித்து சரியான தகவல்கள் இல்லை. வாரம் வாரம் படங்கள் வெளியாவது படங்களின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பது உண்மை...