Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை 2021 - 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Advertiesment
ஜூலை 2021 - 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
, வெள்ளி, 2 ஜூலை 2021 (15:18 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான ஏழாம் எண் அன்பர்களே! இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும்.

பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும்.

பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
 
பரிகாரம்: கெஜலட்சுமியை வெள்ளிக் கிழமையில் பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 2021 - 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...