Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை 2021 - 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Advertiesment
ஜூலை 2021 - 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
, வெள்ளி, 2 ஜூலை 2021 (15:09 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான மூன்றாம் எண் அன்பர்களே! நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம்.

கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பெண்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
 
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 2021 - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...