பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23

சனி, 1 பிப்ரவரி 2020 (16:28 IST)
பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த ஒரு விஷயத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் எண்ணம் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31