பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

சனி, 1 பிப்ரவரி 2020 (16:23 IST)
பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ...

 
முதியவர்களுக்கும் நண்பர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

பெண்கள் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28