Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
, வியாழன், 1 டிசம்பர் 2016 (16:49 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது, என்பதை புரிந்து செயல்படுவீர்கள்.

விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வரும் மோதல்கள் விலகும். வீடு வாங்குவது, விற்பது, மாறுவது நல்ல விதத்தில் முடியும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உறவினர்கள் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தூரத்து சொந்தங்களை சந்திப்பீர்கள்.

பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். அலைச்சல் குறையும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். என்றாலும் மனைவியுடன் மோதல்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்மறை எண்ணம் விலகும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 8, 6, 5, 14, 17
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: அடர்நீலம், பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25