Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25
, வியாழன், 1 டிசம்பர் 2016 (16:45 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் புதிய எண்ணங்கள் உதயமாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தடைப்பட்ட கல்யாணம் முடியும். வாகனம் வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலைக் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.

கௌரவப் பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் ஒருவித படபடப்பு, பேச்சில் தடுமாற்றம், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் மாதமிது.    

அதிஷ்ட தேதிகள்: 7, 16, 20, 24
அதிஷ்ட எண்கள்: 3, 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24