தேவையான பொருட்கள்:
நண்டு - 8 (சுத்தம் செய்தது)
வெங்காயம் - 10
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த் துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து விழுதாக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்று காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது என ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
நண்டு வெந்ததும் அரைத்த வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 முதல் 10 நிமிடங்கள் நன்கு சுண்டி வரும்வரை வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லி தழையை தூவி விடவும். சுவை மிகுந்த நண்டு வறுவல் தயார்.