Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதுளம் பழச்சாற்றுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.....!

Advertiesment
மாதுளம் பழச்சாற்றுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.....!
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச்  சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை,  மார்பகங்கள், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
 
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
 
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். இதனால் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
 
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

webdunia

 
மாதுளம் பழத்தை அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு  முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம்  தெரியாமல் மறைந்துவிடும்.
 
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
 
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்குவதோடு, ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை  வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றும் பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர்  முதலிய எந்த அல்சரையும் குணமாக்குகிறது.
 
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா சீரகம்...!!