Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா சீரகம்...!!

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா சீரகம்...!!
ரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல்  ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக  இயங்கச் செய்யும்.
 
அகத்திக் கீரையுடன் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி தூள் செய்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம்  மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
 
ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தைத்தூள் செய்து லேகியமாக மெலிந்து  போனவர்களுக்கு கொடுப்பதும் உண்டு.
 
நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும்  உதவும்.

webdunia

 
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கும். திராட்சை சாறுடன் சீரகம் கலந்து பருகி வர  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
 
அகத்திக் கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
 
நெஞ்சு எரிச்சலுக்கு சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.  மந்தத்தை போக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து ஏசி அறையில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்...!