Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத சத்துக்களை கொண்ட மணத்தக்காளி கீரை...!!

அற்புத சத்துக்களை கொண்ட மணத்தக்காளி கீரை...!!
வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக் கீரை, கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும்.

மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.
 
மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
 
வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேகவைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும்.
 
வாய்ப்புண் உள்ளபோது மணத்தக்காளி, சிறிது சீரகம், ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, பிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும்.
 
காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும். உடல் குளிர்ச்சியடையும். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன்  பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.
 
மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி செடியின் இலைகளை  தண்ணீரில் வேக வைத்து அருந்தி வர இந்த நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7.19 லட்சம் பாதிப்புகள்; 20 ஆயிரத்தை தாண்டிய பலிகள்! மாநிலவாரி நிலவரம்