Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடுமா...?

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடுமா...?
மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி வைட்டமின் தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
மணத்தக்காளி கீரை சிறுநீர்க் கோளாறுகளை சரிசெய்வதுடன், சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். காசநோயாளிகள் மணத்தக்காளி கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.
 
மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை  பருகுகின்றனர்.
webdunia
தோலில் ஏற்படும் அலர்ஜி, வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த மணத்தக்காளி கீரையை சாறாக  பிழிந்து அதன்மேல் தடவலாம்.
 
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.
 
இக்கீரையையும் பழத்தின் விதைகளையும் காயவைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அரை கரண்டி வீதம் காலையும், மாலையும்  உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நண்டு ரசம் எப்படி செய்வது தெரியுமா...?