சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது.
நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியில் கால்சியம், பொட்டசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துக்களும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் B மிகவும் அதிகமாக உள்ளது.
வறண்ட நிலங்களில் காணப்படும் சப்பாத்தில் கள்ளியில் வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வை போக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும், இந்த சப்பாத்திக் கள்ளி உதவுகிறது.
நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.
மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையாகத் திகழும் சப்பாத்திக் கள்ளி, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக பெரிதும் உதவிபுரியும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்றுநோயைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கவும் ஒரு மெய்க்காப்பாளனாக விளங்குகிறது சப்பாத்திக்கள்ளி.
ஞாபக மறதி எனப்படும் அம்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகும்.
சித்த மருத்துவத்தில் இதனை டீ நீராக செய்து குடித்துவந்தால், உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது.