Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்...!!

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்...!!
விஸ்வா இலுப்பை எண்ணெய்யை கொண்டு எந்த நேரத்திலாவது நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம், புறங்கால்களிலும் தொடர்ந்து  தடவி வர நகம் சொத்தை, இளம் வயது கருக்கா பற்கள், பல் சொத்தை இவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
 
எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில்  வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.
 
கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு  சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
 
சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட பல்லில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
 
உப்பு, தயிர், வெங்காயக் கலந்த சாலட் உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும். பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால்  தேவையற்ற கொழுப்பு குறையும்.
 
மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும் இல்லை என்றால் இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பின்னாலும் நாக்கு மற்றும் வாய் புண் சீக்கிரம் ஆறும்.
 
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரிசி கழுவிய நீரில் உள்ள அற்புத பயன்கள்...!!