சிறுநீரக செயலிழப்பு சில அளவில், சுமார் 15%முதல் 25% மக்களைப் பாதிக்கிறது மற்றும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் மிகவும் தாமதமாகவே தோன்றி ஒரு தனிப்பட்ட நபரின் மேல் அமைதியாக பரவக் கூடிய நோயாக உள்ளது.
சிறுநீரக செயலிழப்பு வர காரணம் என்னவென்றால் நாள்பட்ட நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் உட்கொள்ளுதல், தினமும் ஊறுகாய் உட்கொள்ளுதல், அதிக அளவில் மது அருந்துதல், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துதல், சிறுநீரகத்திற்கு செல்லும் குருதி குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படுதலே ஆகும். இவற்றால் உலகில் 8 முதல் 10 சதவீதமான மக்கள் சிறுநீரக நோயால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
சிறுநீரக கல், சிறுநீரக குழாய் தொற்று உயர் இரத்த அழுத்தம் இதனை தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு வரலாம். சிறுநீரகத்தின் பணிகள் என்னவென்றால் தினமும் உடலில் உண்டாகும் நச்சு பொருட்களை வடிகட்டி சிறுநீரில் கழிவுகளை அனுப்பும் முக்கிய பணியை செய்து வருகின்றது. தேவைக்கு அதிகமான உப்புக்களையும் தாதுக்களையும் பிரிக்கின்றது. இரத்தத்தின் கார அமில தன்னையை நிர்வகிக்கின்றது.
நன் உடலில் கழிவுகள் அதிகம் சேர்ந்தால், அது முகத்தில் வீக்கத்தை உண்டாக்கும். இது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
பாதிப்புகள்:
மிக குறைந்த அளவின் சிறுநீர் வெளியேறுதல். நுரைபோன்ற சிறுநீர் வெளியேறுதல். சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல். சிறுநீரை வெளிபடுத்துவதில் சிரமம்.
கை, கால், முகம், வீங்குதல். உடல் தொடர்ந்து சோர்வடைதல். தோலில் சொறி மற்றும் அரிப்பு ஏற்படுதல்.
உணவின் சுவை அறிய இயலாமை. வாந்தி, குமட்டல், தலைவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல், கால் மற்றும் பக்கவாட்டு வலி ஆகியன காணப்படும்.
சிறுநீரக செயலிழப்பு நாள்பட்ட நிலையில் செந்நிற இரத்த அணு குறைந்து கொண்டே வரும்.