Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாருக்கெல்லாம் ரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தெரியுமா...?

யாருக்கெல்லாம் ரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் அதிகம் தெரியுமா...?
ஒரு சிலருக்கு தங்களின் உயரத்திற்கேற்ற எடையை விட கூடுதலான உடல் எடை இருக்கும் பட்சத்தில் அந்நபருக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.


எனவே ஒவ்வொருவரும் தங்களின் உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்வதால் ரத்த அழுத்தம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். 
 
உப்பு, சர்க்கரை நாம் சாப்பிடும் உணவில் ருசியை அதிகம் ஏற்படுத்தும் பொருட்களாக சர்க்கரை மற்றும் உப்பு இருக்கிறது, இந்த இரண்டின் அளவும் நாம் சாப்பிடும் உணவில் அதிகம் கலப்பதால், நமக்கு வருக்காலங்களில் ரத்த அழுத்தம் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. எனவே நமது உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து கொள்வது நல்லது.
 
மனம் சம்பந்தமான பிரச்சனைகள் ரத்த அழுத்தும் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது எனவே மன அழுத்தம் இல்லாதவாறு நம்மை நாம் பாதுகாத்துகொள்ள வேண்டும்.
 
நீண்ட நேரம் கடுமையான உடலுழைப்பபில் ஈடுபட்டும் சரியாக ஓய்வெடுக்காதவர்கள், இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பவர்கள், சரியான தூக்கம் வராத நபர்கள் போன்றோருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.
 
உடல்நலம் நன்றாக இருக்க விரும்புபவர்கள் முழுமையாக சைவ உணவிற்கு மாறுவது சிறந்தது. எனினும் அனைவராலும் சுலபத்தில் அசைவ உணவு பழக்கத்தை விட்டு விட முடியாது. 
 
ரத்த அழுத்தும் வராமல் தடுக்க விரும்புபவர்கள், அப்பிரச்சனை குறைக்க விரும்புபவர்கள் மாடு, ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை அறவே சாப்பிடுவதை தவிர்த்து, அசைவத்தில் மீன் மட்டும் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி உதிர்வு தடுப்பதோடு பொடுகு தொல்லையை போக்கும் அற்புத குறிப்புகள் !!