Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலச்சிக்கல் பிரச்சனையை போக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன...?

மலச்சிக்கல் பிரச்சனையை போக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன...?
, புதன், 16 பிப்ரவரி 2022 (18:18 IST)
சில உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலோ, செரிமானம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது.


முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் பயனுள்ளதும் கூட. இவை மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை மற்றும் குமட்டல் போன்ற செரிமான அறிகுறிகளை குணப்படுத்தும்.

தயிரில் செரிமானத்திற்கு மிகவும் அவசியமான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ன. அன்றாடம் தயிரை ஒரு கப் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் எவ்வித செரிமான பிரச்சனையும் இருக்காது.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமான மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள் தான் இஞ்சி. இஞ்சியை ஒருவர் தினமும் ஒரு துண்டு பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். இஞ்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

வாழைப்பழம் இரைப்பை நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய அற்புதமான பழம். இது மென்மையான குடல் இயக்கத்திற்கு உதவி புரிகிறது.

பப்பாளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று உப்புசத்தை சரிசெய்யக்கூடியது. மேலும் இந்த பழம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்திருக்கிறது மற்றும் செரிமான அறிகுறிகளிடம் இருந்து நிவாரணத்தை வழங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி...?