ஆளி விதையில் வளமான அளவில் டயட்டரி புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. மேலும் ஆளி விதையில் அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே வளமான அளவில் உள்ளது. இதனால் செரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும், மலச்சிக்கலை போக்கும்.
ஒருவரது உடலில் அழற்சியானது அதிகம் இருந்தால்,ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலைத் தாக்கும் அழற்சி நோய்களிலிருந்து பாதுக்காக்கும்.
ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.