Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இட்டுக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (10:53 IST)
மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்.


மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள், வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.

மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணெய்யை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து, நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனை நீங்குகிறது.

மருதாணி இலைகளை நீரில் ஊறவைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கும். மன அழுத்தங்களை குறைக்கும். மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு உண்டு. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் மருதாணி இலை தண்ணீரை பருகி வருவது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments