Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்...?

Webdunia
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு  தடுக்கப்படும்.

தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது. தேயாது. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல்  தப்பலாம்.
 
தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும். விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. 
 
குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
 
மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விடவேண்டும். தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊறவைத்து  சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
 
தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள்  தீரும். 
 
இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments