Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராட்சை சாறை தினமும் அருந்தி வருவதால் இத்தனை நன்மைகளா...?

Advertiesment
திராட்சை சாறை தினமும் அருந்தி வருவதால் இத்தனை நன்மைகளா...?
, புதன், 2 மார்ச் 2022 (09:28 IST)
உடலில் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்கவும் இரத்த விருத்தி ஏற்படவும் மற்றும் ரத்த சுத்தி நடைபெறவும் பச்சை திராட்சை சிறந்ததாகும்.


குடல் புண்ணை குணப்படுத்தும் திராட்சை பழச்சாறு நல்ல மருந்தாக பயன்படுகிறது. காலையிலும் மாலையிலும் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும்.

இரத்த அழுத்த நோயால் துன்பப்படுபவர்கள் திராட்சை சாறை தினமும் அருந்தி வரவேண்டும். காய்ச்சலின் போது கூட தயங்காமல் திராட்சை பழச்சாற்றை பருகக் கொடுக்கலாம்.

ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் காய்ச்சல் நோய் காமாலை போன்ற நோய்களால் துன்பப்படுபவர்கள் காபூல் திராட்சை என்னும் பச்சைத் திராட்சையை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.

பன்னீர் திராட்சையை கொஞ்சம் எடுத்து அரை டம்ளர் நீரில் ஊறவைத்து பின்னர் நன்கு காய்ச்சி பிழிந்து அதே அளவு பசும் பால் விட்டு தினமும் பருகி வந்தால் இருதயம் நல்ல வலிமை பெறும். இவ்விதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அருந்திவர வேண்டும்.

திராட்சைப் பழத்துடன் சீமை அத்திப் பழத்தையும் கலந்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் ஓரளவு கொதிக்க வைத்து கொஞ்சம் இடையில் பருகிவர கண் வலி குணமாகும்.

குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும். இது சம்பந்தப்பட்ட தொல்லைகளைப் போக்கும் நன்கு பசி எடுக்கவும். சிறுநீரக கோளாறுகளைப் போக்கவும். திராட்சைப் பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நுரையீரலை சுத்தம் செய்யும் ஆரோக்கிய பானம்