Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைக்கும் அற்புத மருந்து சோம்பு தண்ணீர்

Webdunia
உடல் எடையை குறைக்க பலரும் பல் செயல்களைப் பின்பற்றி, உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த எளியவகை மருத்துவம் மூலம் பயன்பெறலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை  அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
 
1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து  வர வேண்டும்.
 
சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.
 
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
 
சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
 
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments