உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர் வாழலாம் என்பதை அவரின் உயரம், உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது.
ஒருவர் உணவில்லாமல் வாழமுடியுமா என்றால் அது முடியாது. ஆனால் சிறிது நாட்கள் உணவில்லாமல் வாழ முடியும். அப்படி உண்ணாமல் இருந்தால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும்.
72 மணி நேரத்திற்கு பிறகும் ஒருவர் உண்ணாமல் இருந்தால், உடலில் ஏற்கனவே சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகிய இரண்டிற்கும் பாதிப்பு ஏற்படும். அடுத்தடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க தொடங்கும்.
சிலர் 70 நாட்கள் வரை உண்ணாமல் உயிருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர் வாழலாம் என்பதை அவரின் உயரம், உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது.