Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லலிதா சகஸ்ரநாமத்தை உச்சரிப்பின் பலன்கள்...!!

Advertiesment
லலிதா சகஸ்ரநாமத்தை உச்சரிப்பின் பலன்கள்...!!
, புதன், 8 செப்டம்பர் 2021 (23:27 IST)
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல. ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
 
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனை விட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பெளர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து  வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.
 
லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.
 
லலிதா சகஸ்ரநாமத்தின் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.  எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலவேண்டும். எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
 
லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை  ஏற்றுக்கொள்கின்றன. 
 
மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சுமி கடாட்சம் பெற வழிகள் இவை..