Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாகும் வேலிப்பருத்தி மூலிகை !!

Veliparuthi
, திங்கள், 13 ஜூன் 2022 (10:40 IST)
சாதாரணமாக, வேலிகளில் படர்ந்திருக்கும் இந்த வேலி பருத்தி தாவரத்தின் இலை, இதய வடிவில் இருக்கும். இரட்டை காய்களையும் கொண்டிருக்கும். அந்த காய்கள் வெடித்தால், பஞ்சு போல வெளியே வரும். அதனால் தான், இதை, வேலி பருத்தி என்கின்றனர்.


சீந்தில் என்ற மூலிகையும், வேலி பருத்தி போலவே இருக்கும். இலையை காம்புடன் கிள்ளினால், பால் போல திரவம் வடிந்தால், வேலி பருத்தி. தண்ணீர் போல திரவம் வந்தால், சீந்தில் என, முடிவு செய்யலாம்.வேலி பருத்தியின் இலையும், வேரும் மருத்துவக் குணம் கொண்டவை.

சுவாசக் கோளாறுடன், வயிற்றுப் பிரச்னை, வயிற்று வலி, குளிர் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற பிரச்னைகளையும், இது போக்கும். இதன் இலையை பறித்து, இடித்து, சாறு பிழிந்து, தினமும், காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சுவாசப் பிரச்னை தீரும்.

ஆஸ்துமா கட்டுப்படும். இந்த செடியின் இலையை அரைத்து, லேசாக சுட வைத்து, ஆறியதும், அதில் தேன் கலந்து சாப்பிட, காசநோய் கூட காணாமல் போகும்.

இதன் இலை மூன்றை பறித்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும், வடிகட்டி, வாரம் ஒரு முறை குடித்து வந்தால், குழந்தைகளுக்கு சளித் தொல்லை தீரும். மேலும், உடல் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி இருந்தால், வேலி பருத்தி இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி, மெல்லிய துணியில் கட்டி, ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும்.வேலி பருத்தியை, குழம்பாக வைத்தும் சாப்பிடலாம்.

ஒரு கைப்பிடி வேலி பருத்தியுடன், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அரைத்து, புளி சேர்த்து, குழம்பாக வைத்து, சாதத்திற்கு ஊற்றி சாப்பிடலாம். சற்று கசப்பு சுவையுடன் இருக்கும்.அதுபோல, துவையலாகவும் இதை சாப்பிடலாம்.

மிளகாய் வற்றல், புளி, உப்பு வைத்து அரைத்து, அதை சாதத்தில் போட்டும், தொட்டும் சாப்பிடலாம். வேலி பருத்தி சாறுடன், மிளகு சேர்த்து, நாள் முழுதும் ஊறவைத்து, அந்த மிளகை காய வைத்து, தினமும், ஒரு மிளகு சாப்பிட, மூச்சிறைப்பு நோய் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவிடாய் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகள் !!